Saturday, May 5, 2012

கார்பனின் பண்புகள் இயற்பியல் பண்புகள் C என்ற குறியீட்டுடன் குறிப்பிடப்படுகின்ற கார்பனின் அணு எண் 6 ,அணு நிறை 12. அணுவின் நிறையை அணுத்திணிவு அலகால்(automic mass unit) குறிப்பிடுவார்கள். இதற்கு கார்பன் படித்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது கார்பனின் அடர்த்தி 2050 கிகி/கமீ ஆகும். கார்பனின் உருகு நிலை 3773 K, கொதி நிலை 4173 K . கார்பன் சில உலோகங்களுடன் கூடி கார்பைடுகளை ஏற்படுத்துகின்றது. இவை உலோகப் பண்பில் சிறிதளவும்,அலோகப் பண்பில் சிறிதளவும் கொண்டுள்ளன .கால்சியம், அலுமினியம்,சிலிகான் கார்பைடுகள் பெரிதும் அறியப்பட்டுள்ளன. இவை உறுதிமிக்கதாகவும் ,உயர் உருகு நிலை கொண்டதாகவும் இருப்பதால் உயர் வெப்பநிலையைத் தாக்குப் பிடிக்கும் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கிறது. வேதிப் பண்புகள் கார்பன் மந்தமாக வினை புரியக் கூடிய ஒரு தனிமமாகும். காற்றில் எரிக்கும் போது ஆக்சிஜனுடன் கூடி கார்பன் டை ஆக்சைடை உண்டாக்குகின்றது .கந்தக ஆவியில் இது கார்பன் டை சல்பைடாக மாறுகிறது. புளூரினுடன்நேரடியாகக் கூடுகிறது. ஆனால் பிற ஹாலஜன் களுடனும்,நைட்ரஜ னுடனும் வினை புரிவதில்லை. ஹைட்ரஜனுடன் கூடி பல ஆயிரக் கணக்கான வேதிப் பொருட்களை உண்டாக்கி இருக்கிறது. உயிரியல் மூலக் கூறுகள் பெரும்பாலும் இவ்வகையின இதனால் கரிம வேதியியல் (Organic Chemistry ) என்ற தனிப் பிரிவே தோற்றுவிக்கப்பட்டது. பயன்கள் கார்பனின் ஒரு வடிவம் வைரமாகும். வைரத்தின் ஒளி விலகல் எண் ணும்(refractive index ), பிரிகைத் திறனும் (dispersive power ) மிகவும் அதிகம். அதனால் அது பிரகாசமாய் ஒளியைச் சிந்துகிறது. வைரம், அமிலம், காரம் மற்றும் ஆக்சிஜனூட்டிகளால் பாதிக்கப் படுவதில்லை. 800 டிகிரி C வரை சூடுபடுத்தும் போது கார்பன்டை ஆக்சைடாக மாறி விடுகிறது. கரியையும் மணலையும் மின் உலையில் வைத்து தொடர்ந்து சூடு படுத்த கார்பன் சிலிசைடு உண்டாகி சிலிகான் ஆவியாக்கப் பட்டு கிராபைட் உண்டாகிறது. கிராபைட் செறிவூட்டப் பட்ட நைட்ரிக் அமிலத்தால் பாதிக்கப் படுகின்றது. மின்சாரத்தைக் கடத்தினாலும் வெப்பத்தைச் சிறிதும் கடத்தாத கிராபைட் தீச் செங்கல் ,உலோகங்களை உருக்க உதவும் மண் குப்பிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன் படுகிறது. கிரபைட்டுடன் களிமண் கலந்து பென்சில் தயாரிக்கின்றாகள். இதில் சிறிதளவு ஈயமும் கலக்கப்படும். கிராபைட் ஒரு மசகுப் பொருளாகவும் பயன் தருகிறது. வர்ணங்களின் தயாரிப்பு முறையிலும் ,மின் சாதனங்கள் ,மின் கலங்களில் மின் வாயாகவும் (electrode) பயன் படுகிறது. மரக் கரி சில வளிமங்களை உட்கவர்ந்து கொள்கிறது. இப்படி உட்கவரப்படும் வளிமம் இயல்பான நிலை யில் இருக்கும் போது இருப்பதை விட கூடுதல் தீவிரமிக்கதாய் இருக்கிறது. இப் பண்பு உயர் வெற்றிட வெளியை உண்டாக்கவும் உட்கவரப் படாத நீயான் ,ஹீலியம் வலிமைத்திளிருந்து எளிதில் உட்கவரப்படும் வளிமங்களை பிரித்தெடுக்கவும் பயன் படுத்திக் கொள்ளப் படுகிறது. வயிற்றில் சேர்ந்துள்ள வளிமத்தை அகற்ற கரி சேர்க்கப் பட்ட ரொட்டித் துண்டுகளை மருந்தாகக் கொடுக்கும் பழக்கம் கை வைத்திய முறையில் இன்றைக்கும் பின் பற்றப் படுகிறது. குடி நீரை மணம் அகற்றி கிருமிகளை நீக்கி கழிவு நீரைச் சுத்தப் படுத்தும் முறையிலும் கரி பயன் படுத்தப் படுகிறது. உலோகங்களின் ஆக்சைடு கனிமத்திலிருந்து ஆக்சிஜநிறக்கம் செய்து உலோகத்தைத் தனித்துப் பிரிக்க கரி பெரிதும் உதவுகிறது. கரிப் புகைப் படிவு,இசைத் தட்டுகள் ,கார்பன் தாள் ,தார்பாய்கள் போன்றவற்றின் தயாரிப்பு முறையில் பயன் படுகிறது. எலும்புக் கரி கரைசலின் நிறமிப் பொருளைக் கவர்ந்து வெண்மை யூட்டுவதால் சக்கரைக் கரைசலிலிருந்து சீனி தயாரிக்கப் பயன் படுத்தப் படுகிறது. நிலக்கரி என்பது முழுமையான கார்பன் இல்லை. அதில் கார்பன் தவிர்த்து எப்போதும் நைட்ரஜன் ,ஆக்சிஜன் ,கந்தகம் போன்றவைகளும் மேலும் சிலிகா, அலுமினா மற்றும் பெரிக் ஆக்சைடு போன்றவைகளும் சேர்ந்திருக்கும். தொல்படிவு படிப்படியாகப் பெற்ற சிதைவுகளைப் ; பொறுத்து அதில் கார்பனின் அளவு இருக்கும் மரத்தில் 40 % மும் ,அடுப்புக் கரியில் 60 % மும் பழுப்பு நிலக் கரியில் 70 % மும் கருப்பு நிலக்கரியில் 78 % ஆந்திரசைட் நிலக்கரியில் 90 % மும் கார்பன் உள்ளது. நிலக்கரி தொழிற்சாலைகளில் எரி பொருளாகப் பயன் படுகிறது. அனல் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி ஆதரவாய் உள்ளது .தார் சாலைகள் போடப் பயன் தருகிறது. தாரிலிருந்து பல வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றைக் கொண்டு வண்ண மூட்டிப் பொருள் ,மருந்துகளுக்கான மூலப் பொருட்கள் ,வெடிப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் ,இனிப்புப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள் . கார்பனின் மற்றொரு பயன் பாடு கார்பன் கால மதிப்பீட்டு முறை (Carbon dating ) ஆகும். உயிர் வாழும் மரத்தில் நிலைத்த கார்பன்- 12 உடன் கார்பன் -14 என்ற கதிரியக்க அணுவும் உட்கிரகிக்கப் பட்டு நிலைப்படுகின்றன. இவை irandum ஒரு சம நிலையில் இருக்கும் .ஆனால் மரம் வெட்டப் பட்டவுடன் ,கார்பன் உட்கிரகிப்பு இல்லாததால் ,கார்பன்- 14 சிதைவுற்று அதன் செழுமை குறையும் இதன் செழுமையை அளவிட்டறிந்து மரத்தின் காலத்தை மதிப்பிட முடியும் .

No comments:

Post a Comment